சங்கரன்கோவில்: ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த ஒரு படமும் ஓடவில்லை. இதனால் தனது விஜயராஜ் என்ற பெயரில், ரஜினிகாந்த்தின் பெயரில் இருந்த காந்த்தை எடுத்து ஒட்டிக் கொண்டு விஜயகாந்த் ஆகி விட்டார். அவர் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர். அவருக்கு மக்கள் பாடம் கற்றுத் தர வேண்டும் என்று நடிகர் ராமராஜன் பேசினார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராமராஜன்,
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்தான், விஜயகாந்த். அவரது ஒரிஜனல் பெயர் விஜயராஜ். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரில் இருந்த `காந்த்' என்ற சொல்லை எடுத்து `விஜயகாந்த்' என்று பெயரை மாற்றிக் கொண்டவர், அவர்.
விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாதான். விஜயகாந்த் நன்றி மறந்துவிட்டார். தன்னை பதவியில் அமர்த்திய அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டார். மறைந்த அமைச்சர் சொ.கருப்பசாமி மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடினார். அதை கேட்டு ரசிப்பவர் நம்முடைய முதல்வர்.
சங்கரன்கோவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஒரு பெண்ணை வேட்பாளராக அறிவித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். ஏழை மக்களின் வருமானம் உயர ஆடு, மாடுகளை வழங்கி வருகிறார்.
தி.மு.க. ஆட்சியின் போது சட்டம்- ஒழுங்கு மோசமாக இருந்தது. இப்போது சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதல்- அமைச்சரின் சீரிய திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
No comments:
Post a Comment