Saturday, 17 March 2012

தள்ளிப் போகிறது அமீர்கான் படம்



வரும் ஜுன் ஒன்றாம் தேதி அமீர்கானின் தல்லாஸ் - Talaash - வெளியாகிறது.

இடியட்ஸுக்குப் பிறகு வெளியாகும் அமீர் படம். ரசிகர்கள் ஆவலுடனும், போட்டி கான்கள் பொறாமையுனும் காத்திருக்கும் வேளையில் திடீர் இடி. ஜுன் ஒன்று படம் வெளியாகவில்லை.

முதலில் ஏன் என்று பார்ப்போம்.

தல்லாஸ் ஒரு த்‌ரில்லர். போஸ்டரே மிரட்டுகிறது. அமீர்கானின் கெட்டப்பும். தடித்த மீசையில் ஆளே மாறியிருக்கிறார். நிற்க. விஷயத்துக்கு வருவோம். தல்லாஸை வெளியிட திட்டமிட்டிருந்த நேரம்தான் அமீர்கான் ஒப்புக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொடங்குகிறது. படமும், நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் இருப்பதை அமீர் விரும்பவில்லை. படத்தின் பிரமோஷனில் கவனம் செலுத்த முடியாது என்பதே இதற்;கு காரணம். படத்தின் மற்ற தயா‌ரிப்பாளர்களான ‌ரித்தேஷ் ஸித்வானியும், பர்கான் அக்தரும்கூட இதையே விரும்புகிறார்கள்.

சரி, எப்போதுதான் படம் வெளிவரும்.

அதுதான் உண்மையான அதிர்ச்சி. ஏதாவது காரணத்துக்காக படத்தை தள்ளி வைப்பதென்றால் இரண்டு நாள் தள்ளி வைப்பார்கள், ஒரு வாரம் தள்ளி வைப்பார்கள், நேரம் ச‌ரியில்லையென்றால் ஒருமாதம்கூட தள்ளிப் போகும். ஆனால் தல்லாஸை ஐந்து மாதங்கள் தள்ளிப் போகிறது. தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 30 ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

பார்த்துப்பா... பி‌ரிண்டை எலி கடிச்சிடப்போகுது. 

No comments:

Twitter Bird Gadget