இப்போதெல்லாம் மொக்கைப் படத்தையும் சர்வதேச விருது பெற்ற படம் என்றுதான் விளம்பரப்படுத்துகிறார்கள். அந்தளவுக்கு சர்வ தேசத்திலும் விழா நடத்துகிறார்கள். ஆனால் இந்த மேட்டர் அப்பிடியில்லை.
காட்டுப்புலி, கடல் என்று விதவிதமாக நடித்து வரும் அர்ஜுன் கிடைத்த இடைவெளியில் பிரசாத் என்றொரு படத்தில் நடித்துள்ளார். அடிதடி இல்லாத அப்பா பாசப் படமாம். வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தையின் தந்தை வேடம். மற்ற படங்களில் அடித்து துவைப்பவர் இதில் நடித்து அசத்தியிருக்கிறாராம். சமீபத்தில் நடந்த பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கண்ணீரை வழவழைத்ததாம் படம்.
சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க... கர்ச்சீஃபோடு வர்றோம்.
No comments:
Post a Comment