Sunday, 11 March 2012

காஜல், தாப்ஸியின் கவர்ச்சி மழை


ஆந்திரா ரசிகர்கள் ஸ்பைசியானவர்கள். நடிகைகள் டூ பீஸ், சிங்கிள் பீஸில் வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். தமிழைப் போல் இழுத்துப் போர்த்தினால் அடுத்த ஃபிளைட்டில் வீடு திரும்ப வேண்டியதுதான்.

2011ல் காஜல், தாப்ஸி இணைந்து நடித்த வீரா என்ற படம் ஆந்திராவில் வெளியானது. பாடல் காட்சியில் இவர்கள் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து ஆந்திராவே கண்ணை மூடிக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அற்புதப் படத்தை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்று தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். வீரய்யை என்று பெயர்.

சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டை நேரடித் தமிழ்ப் படத்துக்கு இணையாக கொண்டாடினார்கள். விரைவில் திரைக்கு வந்து விருந்து வைக்கயிருக்கிறது வீரய்யா.

இவ்வளவு சொல்லிட்டு படத்தின் ஹீரோ யார்னு சொல்லாம விட்டுட்டிங்களே என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. அட, ஆடியோ வெளியீட்டில்கூட இந்த இரு நடிகைகளின் படம் உள்ள சிடியைதான் வெளியிட்டார்கள். அவர்களே அப்படி என்றால் நாம எதுக்கு வேண்டாத விஷயத்தை கிளறணும் பாஸ்?

No comments:

Twitter Bird Gadget