3 படத்துக்குப் பிறகு தனுஷ் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்விக்கு ஆச்சரியமான பதில் கிடைத்திருக்கிறது.
கொலை வெறி புகழ் தனுஷை நார்த் இந்தியா வரை கொண்டு சேர்த்திருக்கிறது. தனுஷின் புதிய படத்தை இயக்குகிறவர் பரத்பாலா. ரஹ்மானின் ஜன கண மன ஆல்பத்தை இயக்கியவர்.
இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சர்வதேச புராஜெக்ட்களில் பிஸியாக இருக்கும் ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், கௌதமின் இதுவரை தொடங்கப்படாத படமான யோஹன் அத்தியாயம் ஒன்று போன்ற சொற்பப் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்.
ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment