படத்தை அறிவித்த போது காதல்கொண்டேன், மயக்கம் என்ன வரிசையில் இன்னொரு படமாக இருக்கும் என்று தோன்றியது. படத்தின் பட்ஜெட், லொகேஷன், படத்தின் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்கையில் இன்னொரு ஆயிரத்தில் ஒருவனோ என பதற வைக்கிறது. இரண்டாம் உலகம் பற்றிய இன்னொரு இடி செய்தியைதான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்.
நான் கடவுன் படத்தின் போது சின்னதாக சிக்ஸ்பேக் வைத்துதான் நடித்தார் ஆர்யா. அதையே மேலும் டெவலப் செய்யச் சொல்லியிருக்கிறாராம் செல்வராகவன். படத்தில் இரண்டு அனுஷ்கா இருப்பது போலவே இரண்டு ஆர்யாவும் இருப்பதாக மேலும் பீதி கிளப்புகிறார்கள். பிரெசிலில் லொகேஷன் பார்த்து திரும்பியிருக்கிறார் செல்வராகவன். ஸ்டிரைக் முடிந்ததும் கேமராவுடன் கிளம்ப வேண்டியதுதான்.
இந்தமுறை யுவன், ஜி.வி.பிரகாஷ் இருவரையும் தவிர்த்து ஹாரிஸுடன் கைகோர்த்திருக்கிறார். இருவருமே ஆமை வேகம் என்பதால் தயாரிப்பாளர் முயல் வேகத்தில் துரத்த வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment