Thursday, 8 March 2012

முதல்முறையாக இரட்டை வேடத்தில் ஆர்யா

 
 
செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். இப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்போது ஆர்யாவும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும் பகுதி முடிவடைந்துள்ள நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கோவாவில் நடைபெறுகிறது.

இப்படம் குறித்து ஆர்யா குறிப்பிடுகையில்,

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் எலி மாதிரி வேகமாக ஓடுவது முக்கியமல்ல, ரொம்ப தூரம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜெயிக்க முடியும். நான் அதேமாதிரி ஓடுவதற்கு தயாராகிவிட்டேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாததாக இருக்கும்.

என்று கூறினார்.

No comments:

Twitter Bird Gadget