Thursday, 8 March 2012

ரஜினிகாந்தின் அடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்த்?

 
 
ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராக உருவெடுத்தவர் கே.வி.ஆனந்த். இவர் இயக்கிய ‘அயன்’, ‘கோ’ ஆகிய படங்கள் மெஹா ஹிட்டானது.  இதனால் கோலிவுட்டில் அறியப்படும் இயக்குனராக மாறினார்.

இவர் தற்போது சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’ படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது நடிக்கவிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை அடுத்து, அவர் நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த இயக்கப்போவதாகவும், கே.வி.ஆனந்தின் கதை சொல்லும் விதம் ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கே.வி.ஆனந்திடம் கேட்கையில், இத்தகவலை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

முன்னதாக, இவர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Twitter Bird Gadget