Friday, 9 March 2012

தேசிய விருது எதிர்பாராதது-ரேவதி

நடிகையும், இயக்குனருமான ரேவதியின் குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
Revathi
சமீபத்தில் 59வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகை நடிகையும், இயக்குனருமான ரேவதியின் 'ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ்' என்ற குறும்படத்திற்கு திரைப்படங்கள் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

இது குறித்து ரேவதி கூறியதாவது,

பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த குறும்படம் 17 நிமிடங்கள் ஓடும். இதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த படத்தை எடுத்தோம். நாங்கள் எந்த விருதையும் எதிர்பார்த்து எடுக்கவில்லை. இது எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சி என்றார்.

ரேவதி ஏற்கனவே தேவர் மகன் படத்திற்காக சிறந்த துணை நடிக்கைகான தேசிய விருதையும், மித்ர், மை பிரண்ட் என்ற ஆங்கில குறும்படத்திற்காக ஒரு தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Twitter Bird Gadget