பில்லா 2 - சினிமா விமர்சனம்-- BILLA REVIEW
ஹீரோ ஒரு அகதி.. பஞ்சம் பிழைக்க தமிழ் நாடு வர்றார்.. அங்கே இருக்கும்
லோக்கல் பார்ட்டி கிட்டே வைரக்கடத்தல் செய்யும் வேலை சக்சஸ்ஃபுல்லா செய்யறார்..
விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல ஹீரோ உழைப்பால பெரிய ஆளா 3 நிமிஷத்துல ஆகற மாதிரி
ஹீரோ கொலையால, குயுக்தி மூளையால ஸ்டெப் பை ஸ்டெப்பா பெரிய ஆள் ஆகறார்..
ஹீரோவுக்கு ஒரு அக்கா,, அக்காவுக்கு ஒரு பொண்ணு..
ஆக்ஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு அக்கா கேரக்டர்னு அவங்களை பாதிலயே பரலோகம்
அனுப்பிடறாங்க.. முறைப்பெண்ணுக்கு இப்போ ஹீரோ தான் கார்டியன்.. ஆனா அவருக்கு லவ்
பண்ண எல்லாம் டைம் இல்லை.. “குருவி”யை சுடற மாதிரி எதிரிகளை சுடவே அவருக்கு நேரம்
சரியா இருக்கு..
வில்லனை மீட் பண்றார்.. அவன் கூட பிஸ்னெஸ்
டீலிங்க் பண்றார்.. நாமெல்லாம் 15 வருஷம் கூடவே படிச்ச ஃபிரண்டுக்கு நம்ம கேர்ள்
ஃபிரண்டை காட்ட 10,000 தடவை யோசிப்போம்.. ஆனா வில்லன் சுத்த கேனக்கிறுக்கன் போல ,
முத சந்திப்பிலயே தன் கேர்ள் ஃபிரண்ட் இவதான்னு ஹீரோவுக்கு அறிமுகம் பண்ணிடறான்..
அவளும் ஹீரோ மேல ஒரு கண்ணை வெச்சுக்கறா ( இன்னொரு கண்ணை வில்லன் மேல )
ஃபாரீன் பட ரேஞ்சுக்கு படம் இருக்கனும்னு
திடீர்னு ஹீரோ கடத்தல் பிஸ்னெஸ்ல ஆயுதக்கடத்தல் ஸ்டார்ட் பண்றாரு.. என்ன விசேஷம்னா
ஹீரோ வெச்சிருக்கற அதே மாடல் கன் தான் மற்ற எல்லா அடியாள்ங்க, வில்லன்க எல்லாரும்
வெச்சிருக்காங்க.. ஆனா அவங்க எல்லாம் சுட்டா ஹீரோவுக்கு ஏதும் ஆகலை, ஆனா ஹீரோவோட
ஒரு ஷூட் கூட மிஸ் ஆகறதே இல்லை.. இடைவேளை வரை நாயகன் டைப் ல மாஃபியா ஆகும் கதை பர
பர ஆக்ஷன்;ல சொல்லி இருக்காங்க,..
இடைவேளைக்கு பிறகு தான் டைரக்டருக்கு குழப்பம்..
ஏன்னா கதை கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி .. இன்னும் ஒரு மணி நேரம் படத்தை எப்படி
இழுக்க? ஆ,.,. ஐடியா..
ஹீரோ ஒரு மாநிலத்தின் சி எம்மையே மிரட்றாரு.. சி
எம் நம்ம கலைஞர் மாதிரி காசுக்கு ஆசைப்படறவரா இருந்தா கமுக்கமா டீல் போட்டு ஓக்கே
சொல்லி இருப்பாரு.. ஸ்மூத்தா ஹீரோ லைஃப் போய் இருக்கும்.. ஆனா சி எம் தமிழ் நாடு சி
எம் இல்லை.. அவர் குஜராத் மோடி மாதிரி.. போல..
அதனால ஹீரோ என்னமோ தன் வீட்டு வாட்ச் மேனை கொலை
பண்ற மாதிரி அல்ப சொல்பமா சி எம்மை ஈசியா கொலை பண்ணிடறார்.. கேஸ் நடக்குது.. அஜித்
படத்துல அஜித் தானே நடக்கனும்././ கேஸ் நியாயமா நடக்கலாமா?
ஜட்ஜ் ஜை மிரட்டி ஜாமீன் வாங்கிடறார்.. மிச்ச
மீதி இருக்கும் வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளறார்..
படத்துல ஹீரோயின் இருக்கறாரே அவரை என்ன பண்ண?
வில்லன் ஹீரோயினை போட்டுத்தள்ள, ஹீரோ மிச்ச மீதி இருக்கும் வில்லன்க எல்லாரையும்
போட்டுத்தள்ளிடறார்.கடைசில எண்ணிப்பார்த்தா... அவர் எதையும் எண்ணிப்பார்க்க டைம்
இல்லை.. ஆடியன்ஸ் எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலை.. அதுல ஹீரோ மட்டும் 78
பண்ணிடறார்.. உஷ் அப்பா கண்ணை கட்டுது..
அஜித் நடிப்பை பற்றி பார்க்கறதுக்கு முன்னே
அவரோட தோற்றத்தை பற்றி ஒருவார்த்தை. தமிழ் சினிமால இப்போ இருக்கும் ஹீரோக்களில்
கோட் சூட்
போட்டுட்டு ஹேண்ட்சம்மா இருக்கும் ஹீரோக்களில் இவருக்கே முதல் இடம்,
ரேபான் கூலிங்க் கிளாஸ், ரேமண்ட் பேண்ட் சர்ட்டுக்கான விளம்பர மாடல்னு
சிலர் கிண்டல் அடிச்சாலும் அஜித் செம பர்சனாலிட்டி ஹீரோதான், ஜேம்ஸ்
பாண்ட் மாதிரி ஸ்பை கேரக்டர் பண்ணா படம் அள்ளிக்கும்...

இந்தப்படத்துல அஜித் புதிய பாணில வசனம் பேசி
இருக்கார்.. அதாவது தேவைப்படும் இடத்துல மட்டும் தான் டயலாக்.. ஷார்ப்.. அவர்
பேசும் வசனங்கள் 25 இடத்துல 16 இடங்கள்ல கை தட்டலை அள்ளிக்குது..
ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன் கேரளா ஜிகிடி,,
பொதுவாவே
நம்மாளுங்களுக்கு கேரளான்னா ஒரு கிளுகிளுப்புத்தான்.. ( அதுக்கு என்ன
ரீசன்?ன்னு உன் நெஞ்சைத்தொட்டு சொல்லு என் ராசா.. அப்டினு எல்லாம்
கேட்கப்படாது) . ஜிகிடி முக அழகு 30% தேக அழகு 70 % கொண்ட சந்தனச்சிலை..
. பாப்பா ஓப்பன் யுனிவர்சிட்டில கில்மாலஜி படிச்சிருக்கும் போல ..... மாசத்துக்கு 30 நாளும் பாப்பாவை பார்த்துட்டே இருக்கலாம்.. 60 மார்க் போடலாம்
இன்னொரு ஜிகிடி ப்ரூனா அப்துல்லா.. ஜிகிடி கிட்டே ஒரு வேண்டுகோள், ப்ளீஸ்கட் த அப்துல்லா.. என்னமோ மாதிரி இருக்கு.. மற்றபடி பார்வதி ஓமனக்குட்டன்கூட போட்டி போடும் அளவு இருக்காங்க.. ஜிகிடிக்கு கண்கள் மட்டும் சின்னது,ஆனா கூர்மையான பார்வை.. இந்த பாப்பாவும் டூ பீஸ் டிரஸ் ல தான் சுத்துது,2 கர்ச்சீப் வாங்கிக்குடுத்து இதுதான் ஸ்விம்மிங்க் டிரஸ் என சொல்லிஏமாத்திட்டாங்க போல.ஆள் பாதி ஆடை பாதி பழமொழியை பொய்ப்பிக்கும் வண்ணம் ஆள் இங்கே ஆடை எங்கே?எனகேட்கும் பூனம் பாண்டே ஜாதிப்பெண் போல. அவரோட 173 செமீ உயரத்துல 14 செமீ தான் உடை. கலாச்சாரக்காவலர்கள் கூட தியேட்டரில் திறந்த வாய்மூடாமல் ரசிச்சுட்டு இருக்காங்க. ஹீரோயின் நடிப்பு பற்றி சொல்லாம சம்பந்தம் இல்லாம
என்ன உளறல்? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்? பாப்பா பாதி நேரம்
ஜட்டில தான் சுத்திட்டு இருக்கு. ஹி ஹி ஜட்டி போட்ட குட்டி..ஷேம் ஷேம்
பப்பி ஷேம் .

இரா.முருகன் தான் படத்தோட ரியல் ஹீரோ.. வசனங்கள் செம ஷார்ப்.. ரஜினிக்கு எப்படி பாலகுமாரன் பாட்ஷாவுல ஸ்டார் வேல்யூவை தூக்குனாரோ அந்த மாதிரி.. இனி அஜித்தின் ஆஸ்தான வசனகர்த்தா ஆக வாய்ப்பு உண்டு.. வெல்டன் முருகன்..
இசை யுவன் ஷங்கர் ராஜா.. சுமார் ரகம் தான்..
பில்லா பாகம் 1 தீம் மியூசிக் வரும்போது எல்லாம் தியேட்டர்ல அப்ளாஸ்
அள்ளுது../
படத்துல 4 வில்லன்க. எல்லாரும் ஓக்கே.. தான்..
பில்லா பாகம் 1 போல எல்லார் கண்லயும் கூலிங்க் கிளாஸ் எல்லாம் குடுக்கலை.. ஒன்லி
ஃபார் ஹீரோ..
மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை
(இரா.முருகன் )
1.உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு !
2. பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?
1.உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு !
2. பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?
நல்லவங்களை கண்டுபுடிக்கிறது தான்
கஷ்டம்
3. ஆயுதங்களுக்கு மார்க்கெட் அமோகமா இல்ல ,சாவுக்குத்தான்.. சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்
4. என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் , ஏன் ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினது டா
5. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஆனால் ஒரு டானுக்கு… சரித்திரம்.
6. என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியாஇருக்கிறதுக்கு தகுதி வேணும்”
7.மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..

8. உன் பேரு என்ன?
பில்லா , டேவிட் பில்லா
எங்கே இருந்து வர்றே?
கடல்ல இருந்து
பவளத்துறைல ( படகுத்துறை) என்ன பண்ணிட்டு
இருந்தே?
------ புடுங்கிட்டு இருந்தேன்
9. நீ தீவிரவாதியா?
தீவிரவாதிக்கும், போராளிக்கும் ஒரே வித்தியாசம்
தான்.. போராடிட்டு இருக்கறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன்
போராளி..
10. அவன் அகதிதான், ஆனா அநாதை இல்லை.. அவனுக்கு
நான் இருக்கேன்..
11. லாரில என்ன?
என்ன? உங்களுக்கு ஜலதோஷமா?
என்ன நக்கலா?
பின்னே என்ன சார்? ஊருக்கே தூக்குது மீன்
வாசம்.. உங்களூக்கு தெரியல?
12. இளவரசு - திருச்சிற்றம்பலம்
பாண்டிச்சேரி
திருச்சிற்றம்பலம்னா தூய தமிழ்ல வணக்கம்னு
அர்த்தம் ( அய்யய்யோ, இனி டி பி கேடி டெயிலி திருச்சிற்றம்பலம் சொல்வாரே?) நீ
பதிலுக்கு சிவ சிதம்பரம்னு சொல்லனும்
13. செஞ்ச வேலைக்கு காசு வாங்கிட்டேன்.. இது
எதுக்கு? வேணாம்..
இது நீ இனி செய்யப்போற வேலைக்கு
14. ஹீரோயின் - நீ குடுக்கற பரிசுப்பொருள்
எதுவும் வேணாம்.. நீ அடிக்கடி என்னை பார்க்க வந்தா போதும்./ ( பார்த்தா
போதுமா?)
15. காலம் மாறிட்டு இருக்கு, காலத்துக்கு
தக்கபடி நாமளும் மாறிட்டே இருப்பதே புத்திசாலித்தனம்
16. உன் தைரியம் அசாத்தியமானதுதான், ஆனா
அளவுக்கதிகமா ஆசைப்படறே
இது ஆசை இல்ல அண்ணாச்சி, பசி
17. லேட்டா போனா பொறுப்பில்லைன்னு
சொல்லிடுவாங்க,முன்னாலயே
போனா வேற வேலை இல்லை போலன்னு எளப்பமா
நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பா போகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு
நம்பிக்கை வரும்..
18. வில்லன் - என் இடம் பிடிச்சிருக்கா?
சொர்க்கத்தையே சொந்தமா வெச்சுக்கிட்டு
பிடிச்சிருக்கா?ன்னு கேட்டா எப்படி?
19. இந்தப்பையன் நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி
இல்லைன்னு சொல்றீங்களா?
இல்லை, நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி இல்லை (
2ம் 1 தானே/)
20. பவர், தைரியம் மட்டும் போதாது , மேலே
இன்னும் தகுதி வேணும்.. பிஸ்னெஸ்ல தப்பு பண்ற மாதிரி இல்லை இது.. உயிர் போகும்.. நீ
அதுக்கு ஒர்த் இல்லை
21. நான் வேலை விஷயமா வெளியூர் போகனும்..
என்னையும் கூட்டிட்டு போங்க..
வேலை விஷயமான்னு சொன்னேனே?
22. அவன் சின்ன வயசுல இருந்தே கூட இருக்கான்,
காட்டித்தர மாட்டான்..
இதுவரை காட்டிக்குடுத்தவங்க எல்லாரும் கூட
இருந்தவங்க தான்.. சரித்திரத்தை புரட்டிப்பாரு
23. இப்போ நீ என்ன போட்டுக்குடுத்தே?
24. எமோஷனலா இருக்கறப்போ எந்த முடிவும்
எடுக்காதே
ம் ம் அவன் என்னை வளர விடுவான்னு நான்
நினைக்கலை.. விட மாட்டான்.. நானும் அவனை விடப்போறதில்லை
25. ஜெயிப்பதற்காக 100 எதிரிகளை கொல்லலாம்
தப்பில்லை, ஆனா ஒரு துரோகியை கூட உயிரோட விட்டு வைக்கக்கூடாது
26. மக்களோட வறுமையை போக அரசாங்கத்தோட
திட்டங்கள் மட்டும் பத்தாது, அரசாங்கத்துக்கு இந்த மாதிரி நிதி உதவியும் தேவை
27. பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, கூலிக்காரனா
இருந்தாலும் சரி , பிஸ்னெஸ் மேனா இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும்,
உழைக்கனும்//
28. வில்லன் - எனக்காக உயிரைக்குடுக்க
லட்சக்கணக்கான மக்கள் இருக்காங்க..
மக்கள் உனக்காக ஓட்டு போடுவாங்க, ஆனா உயிரை.
ம்ஹூம் குடுக்க மாட்டாங்க
29. நான் உன் வழில வர மாட்டேன், நீ என் வழில
வராதே
30. நினைச்சதெல்லாம் முடிச்சுட்டியா?
இதான் ஆரம்பம்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஈழ அகதி கதை மாதிரி பில்டப் கொடுத்தது,
விளம்பரங்கள் மூலம் செம மார்க்கெட் பிடிச்சது.,. இந்தப்படம் ஒரு வாரம்
ஹவுஸ்ஃபுல்லா ஓடுனாலே 64 கோடி கிடைக்கும்னு சொல்றாங்க.. வெரிகுட்
மார்க்கெட்டிங்க்
2. படத்தின் எடிட்டிங்க், வசனங்கள் செம ஷார்ப்..(
க்ரெடிட் கோஸ் டூ ரைட்டர் சுபா, டயலாக் ரைட்டர் ரா முருகன்)
3. அஜித் தவிர வேறு யார் நடிச்சாலும் இந்த அளவு
எடுபட்டிருக்குமா என்றால் சந்தேகம் தான்.. கேரக்டர் செலக்ஷன் கன கச்சிதம்.
4. பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தை தடை
செய்யவில்லை.. ஒளிப்பதிவு, இசை சராசரி..
5. அகதியாய் இருக்கு8ம் சாதா ஆள் ஸ்டெப் பை
ஸ்டெப் உயரும்போது அஜித் டிரஸ்ஸில், நடையில் , கெத்தில் மாற்றங்கள் காட்டுவது
செம//
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக்
மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( சக்ரி டோலெட்டி)
1. என்கொயரியில் ஒரு ஆஃபீசரிடம் ஒரு
சாதா அகதி அவ்வளவு தெனாவெட்டாக பேச முடியுமா?சும்மா விட்டுடுவாங்களா?
2. சைக்கிள்ல ஒரு அகதி தப்பி போகும்போது வில்லன்
ஷூட் பண்றான்.. ஆக்சுவலி அவன் அப்டியே தான் விழுவான்,,.? ஆனா ஜம்ப் பண்ணி 2 அடி
முன்னால விழறான்.. பீரங்கிலயா சுட்டான்?
3. ஸ்டேஷன்ல லாக்கப்ல தல அஜித் முகத்துல ஏகபட்ட
வெட்டுக்காயம், ரத்தம்.. அடுத்த ஷாட் அவர் வெளீல வர்றப்போ அப்பாஸ் மாதிரி மழு மழு
கன்னம்
4. இளவரசுதான் அஜித்துக்கு முத ஓனர்.. ஆனா அவர்
அடுத்த ஓனர்ட்ட போறப்போ அவர் தடுக்கலை, வாழ்த்தலை. எதுவும் கருத்தே சொல்லலையே? ஒரு
டேலண்ட் வேலைக்காரனை அவ்ளவ் சீக்கிரம் ஒரு முதலாளி விட்டுக்குடுத்துடுவானா?
5. ஹீரோவோட அக்கா பொண்ணு ஹீரோ மேல பாசம்
வெச்சிருக்கா, லவ்வறா.. ஆனா பார்ட்டில குடி போதைல எவன் கூடவோ ஆட்டம் போட்டுட்டு
இருக்கா// மனசுக்குள்ள த்ரிஷான்னு நினைப்பா?
6. ஹீரோ - ஹீரோயின் மனம் தொடும் காதல், அன்பு
பரிமாற்றக்காட்சிகளே இல்லை.. அதனால ஹீரோயின் ஆபத்துல இருக்கும்போது ,
சாகடிக்கப்படும்போது நமக்கு பதட்டமே வர்லை..
7. ஹீரோயின் வில்லனால். கொலை செய்யப்படும்போது
வேடிக்கை பார்க்கும் ஹீரோ அவருக்கு ஆபத்துன்னு வரும்போது வில்லனை தாக்கறார். அதே
தாக்குதலை ஹீரோயினுக்கு ஆபத்து என்றதும் ஏன் செய்யலை?
8. ஒரு மாநிலத்தின் சி ம்க்கு ஒரே ஒரு ஜீப்பில் 2
ஆட்கள் தான் பாதுகாப்பா? அசால்ட்டா அப்படி கொலை பண்ண முடியுமா?
9. தன் அக்கா பொண்ணுக்கு ஏன் ஹீரோ பாதுகாப்பு
தர்லை? அநாமத்தா விடறார்? அப்புறம் அவரை மலேசியா அனுப்ப எப்படி வில்லியை நம்பறார்?
வில்லி கிட்டே பொறுப்பை ஒப்படைக்கறார்?
10. ஹீரோயின் வில்லி கூட மேட்டர் பண்ணாரா?
இல்லையா? தெளிவா சொல்லலை.. ( ஏன்னா தமிழன்க கதை தெளிவா இல்லைன்னா கூட கண்டுக்க
மாட்டாங்க,,. இந்த மாதிரி கில்மா மேட்டர்ல கரெக்டா சொல்லிடனும்)
11. அதே மாதிரி ஹீரோ ஹீரோயினை லவ்வறாரா? இல்லையா?
என்பதையும் தெளிவா சொல்லலை
12. ஈழத்தமிழ் ஒரு சீன்ல கூட ஹீரோவோ, யாருமோ பேசலை.. அப்புறம் எதுக்கு அகதி கதை?
அஜித்திடம் சில கேள்விகள்
1. மங்காத்தா பட பாதிப்பில் இருந்து எப்போ வெளீல வருவீங்க? ஆண்ட்டி ஹீரோ முத்திரைல சிக்கிக்காதீங்க..
2. தொப்பையை குறைங்க.. ஃபைட் சீன்ல காலை தூக்கவே முடியல
3. தயவு செஞ்சு பில்லா பாகம் 3 எடுத்தா அதுல நடிக்காதீங்க
Billa 2 - Only for thala fans...

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ,
குமுதம் ரேங்க் - ஓக்கே