Thursday, 8 March 2012

பிரபு தேவா படத்திலிருந்து கரீஷ்மா கபூர் நீக்கம்!

 

பிரபுதேவா “ரவுடி ரத்தோட்” என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட கரீஷ்மா கபூரை தேர்வு செய்தார் பிரபு தேவா. இதற்கு ஒப்புக்கொண்டு நடனம் ஆடஷூட்டிங்கிற்கு வந்த போது அவரிடம் போஜ்புரி பாணியிலான காஸ்டியூம் கொடுத்து அணியச் சொன்னார். இதற்கு கரிஷ்மா மறுத்ததால் பாடல் படமாக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் பட தயாரிப்பாளர் மீண்டும் கரீஷ்மாவை தொடர்புகொண்டு சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதையடுத்து பாடலின் ஒத்திகைக்காக கரிஷ்மாவை பிரபுதேவா வரவழைத்தார். அப்போது உடல் எடையை குறைத்திருந்த கரீஷ்மாவை கண்டதும் பிரபுதேவா, இப்பாடலுக்கு கொஞ்சம் உடல் எடை கூடிய நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று பட தயாரிப்பாளரிடம் கூறினார். இருந்தாலும் கரிஷ்மாவை வைத்து 2 நாள் ஒத்திகை நடத்தினார். அவரது நடன அசைவுகளில் திருப்தி இல்லாததால் கரீஷ்மாவை படத்திலிருந்து நீக்கினார்.
இதையடுத்து ‘ஏஜென்ட் வினோத்’ படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை மரியம் ஜாதிரா, முமைத்கான் மற்றும் ஷக்தி மோகன் போன்ற 3 நட்சத்திரங்களை நடிக்க வைத்து இப்பாடலை படமாக்கினார்.

No comments:

Twitter Bird Gadget