Thursday, 8 March 2012

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்



பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

No comments:

Twitter Bird Gadget