தமிழில் சித்திரமாக பேசிய நடிகை ரௌத்திரத்தின் உச்சத்தில் இருக்கிறார். ஏன்? இவரது படத்தை காண்பித்து இணையத்தில் யாரோ திருமண மோசடி செய்திருக்கிறார்கள். இது நடந்தது இலங்கையில். இவரின் படத்தை காண்பித்து, தொழிலதிபர் ஒருவரிடம் பணத்தை கறந்திருக்கிறார்கள்.
தொழிலதிபர் ஒருகட்டத்தில் நேரில் பார்க்க வேண்டும் என நெருக்கடி கொடுத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் விஷமிகள் அவர் இறந்துவிட்டார் என நடிகையின் போட்டோவை பத்திரிகையில் கொடுத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இது எப்படியோ இந்தியாவில் இருக்கும் நடிகைக்கு தெரிந்துவிட்டது. சின்ன மூக்கு செவசெவக்க சீறிக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment