மாஸ் ஹீரோ இருக்கார்ங்கிறதுக்காக அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால் பெட்டி மூணே நாளில் திரும்பிடுங்கிற உண்மை திரையுலக ஜாம்பவான்களுக்கு தெரிஞ்சுப் போயிடுச்சி. அதனால் நல்ல கமர்ஷியல் ரைட்டர் யார்னு தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அயன், கோ படங்களுக்கு வசனம் எழுதிய இரட்டை எழுத்தாளர்கள் சுபாதான் இப்போதைக்கு அனைவரின் சாய்ஸ். ஷங்கர்கூட தனது அடுத்தப் படத்துக்கு இவர்களைதான் யூஸ் பண்ணப் போகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நமது விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து இயக்கும் படத்துக்கும் சுபாவைதான் கமிட் செய்திருக்கிறார்.
பட்டியல் தொடங்கி சர்வம் வரை விஷ்ணுவர்தன் இயக்கியது எல்லாமே அயல்நாட்டு சரக்குதான். அதை நாமே கஷ்டப்பட்டு அடிக்க வேண்டுமா? துணைக்கு வேறொருவரை வைத்துக் கொள்ளலாமே என்று யோசித்திருப்பார் போலிருக்கிறது. சுபாவை கதாசிரியராக்கியிருக்கிறார். இவர்களின் கோ கதை ரசல் க்ரோ நடித்த ஸ்டேட் ஆஃப் ப்ளே படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் அயன் போதைப் பொருள் கடத்தல் காட்சிகள் மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ் படத்திலிருந்து சுட்டவை.
அஜீத்துக்கு எந்த லத்தீன் அமெரிக்கா படத்தை சுடப் போகிறார்களோ?
No comments:
Post a Comment