தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடம் பிடித்து தன்னை நிலைக்காட்டி கொண்டவர் நடிகை நயன்தாரா. ஆரம்பகால முதலே இவரை பற்றி சில சர்ச்சையான விஷயங்கள் வந்து கொண்டிருந்தன.
பிரபல நடனம் மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் ஏற்ப்பட்ட காதலால், படங்களை தவிர்த்து நடிக்காமல் இருந்த நயன்தாரா, தற்போது இந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் ஏற்ப்பட்ட கருத்து மோதலால் மனமுடைந்து பிரபுதேவாவை பிரிந்து மீண்டும் கலைச் சேவையாற்றவுள்ள நயன்தாரா கடந்து வந்த பாதையில் நாமும் சிறிது நேரம் பயணிப்போம்...

கேரளத்து வரவான நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன். 1984 ஆம் வருடம் நவம்பர் 18-ஆம் தேதி பிறந்த இவர் முதன் முதலாக 2003-ம் ஆண்டு “மனசினகாரே” என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் ஹரி இயக்கிய ”ஐயா” திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
’ஐயா’ திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார். இதையடுத்து நயன்தாரா பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் “கஜினி” படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதை தொடர்ந்து விஜயுடன் “சிவகாசி” யில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். எஸ்.ஜே. சூர்யாவுடன் “கள்வனின் காதலி” யில் மீண்டும் கதாநாயகியாக நடித்தார்.
நயன்தாராவிற்கு 'வல்லவன்' படம் திருப்பு முனையாக அமைந்தது, சிம்பு இயக்கி, நடித்த ”வல்லவன்” படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்லூரி பேராசிரியராக நடித்தார். இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பும், சிம்புவுடன் காட்டிய நெருக்கமும் அப்போது எல்லா மீடியாக்களுக்கும் தீனியாக அமைந்தது. பின்னர் இந்த நட்சத்திர ஜோடி தங்களுடைய காதலை வெளிப்படுத்தினர். ஆனால் இவர்களது காதல் சிறிது காலத்திலேயே மோதலில் முடிந்தது.
இதனையடுத்து தனது நடிப்பில் முழு கவனத்தை செலுத்தினார். இவர் வருடத்திற்கு ஏழு படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழில் வருடத்திற்கு முன்னணி நடிகர்களுடன் 3 முதல் 4 படங்களுக்கு குறையாமல் நடித்தார். இதனால் தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ”சந்திரமுகி” படம் மூலம் ஜோடி சேர்ந்தார். அஜித்துடன் “பில்லா”, தனுஷுடன் ”யாரடி நீ மோகினி”, விஜயுடன் “வில்லு” போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் குறிப்பிட பட வேண்டிய வெற்றி படங்கள்.
வெற்றியின் உச்சத்தில் இருந்த நயன்தாரா பிரபுதேவாவின் இயக்கத்தில் “வில்லு” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும், நயன்தாராவிற்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இந்த நெருக்கம் இவர்களிடையே காதலாக மலர்ந்த்து. இதையடுத்து பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார்.
தனது இரண்டு குழந்தைகளையும் பிரிந்து நயந்தாராவுடன் வசித்து வந்தார். நயந்தாராவும் தான் இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதனால் இவர் கடைசியாக நடித்த “ஸ்ரீ ராம ராஜ்ஜியம்” படம் பெரும் வெற்றியடைந்தது. இதில் நயன்தாரா சீதா கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அப்போது இந்து மதத்தின் மீது ஏற்ப்பட்ட பற்றால், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆரிய சமாஜ் கோவிலுக்கு சென்று இந்து மதத்திற்கு மாறினார். இதனை தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இனிமையாக சென்று கொண்டிருந்த பிரபுதேவா, நயன்தாரா காதலில் விரிசல் விழ தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது, பிரபுதேவா திருமணத்தை தள்ளி போட்டதும் மற்றும் பிரபுதேவா தற்போது இயக்கிகொண்டிருக்கும் படத்தில் நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானியுடன் தொடர்பு படுத்தி வந்த செய்தியால் மிகவும் மனமுடைந்து வேதனைக்குள்ளானார். தனது வாழ்வில் மீண்டும் இப்படியொரு ஏமாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்காத நயன்தாரா எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிய போது தனிமை அவரை சாந்தப்படுத்தியது. அவரது நலம் விரும்பிகள் மீண்டும் கலைச் சேவையாற்றுமாறு அனுகினர். முதலில் மறுத்த நயன்தாரா, பின்பு தனது எதிர்காலத்தை கருதியும், நலம் விரும்பிகளின் வேண்டுதலின் பேரிலும் பிரபுதேவாவுடன் காதலை விடுத்து மீண்டும் நடிக்க சம்மதித்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் நாகர்ஜீனாவுடன் புதிய படத்தில் நடிக்க நடிக்கயுள்ளார்.
இதுவரை நயன்தாரா தமிழில் 18 படங்களிலும், தெலுங்கில் 9 படங்களிலும், மலையாளத்தில் 7 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.
இவரை போன்ற ஒரு முன்னணி நடிகை உச்சத்தில் இருக்கும் போது தனது நடிப்பை விட்டு விலகி மீண்டும் நடிக்க வந்திருப்பது அவருடைய ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் மீண்டும் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இவருடைய இணையத்தள முகவரி: http://www.nayantaraonline.info/
No comments:
Post a Comment