
பிரபல நட்சத்திர ஜோடிகளான நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில் வருகிற மே 11ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்தனர். இதையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம் என்று பிரசன்னா கூறினார். மேலும், தங்களுடைய திருமண தேதியை விரைவில் அறிவிக்க போவதாகவும் இருவரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இருவரது வீட்டாரும் சந்தித்து திருமணம் தேதியை முடிவு செய்து இருக்கிறார்கள். இதையொட்டி சினேகா-பிரசன்னா திருமணம் வருகிற மே-11ம் தேதி, சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் மிக விமரிசையாக நடக்க இருக்கிறது. திருமண தேதி நெருங்கி வருவதால், தன்னுடைய பட சூட்டிங்கை சீக்கிரமாக முடித்து வருகிறார் நடிகை சினேகா.
No comments:
Post a Comment