அழகர்சாமியின் குதிரை
அப்புக்குட்டிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கிறது. வசனம் பேசுகிற ஒரு
காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட ஒரு கிராமத்து
இளைஞனுக்கு தேசிய விருது கிடைத்தது எத்தனை பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கும்
என்பதை சொல்லத் தேவையில்லை.
அப்புக்குட்டி கிராமத்து ஆள். சினிமாதான் ஒரே லட்சியம். அம்மா, அப்பாவின் காலத்திற்குள் சினிமாவில் சில காட்சிகளாவது நடிக்க வேண்டும் என்பதே இவரது கனவு. ஆனால் அவர்களின் காலத்திற்குப் பிறகே அந்த கனவு வெண்ணிலா கபடிக்குழு மூலம் நிறைவேறியது. இப்போது தேசிய விருதும் வாங்கிவிட்டார். ஆனால் அதனை பார்த்து மகிழ அவரது பெற்றோர்கள் உயிரோடு இல்லை.
சினிமாவில் ஏதாவது சாதித்த பிறகுதான் திருமணம் செய்வது என்று தீர்மானித்திருந்தேன். இப்போது கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன் என்றார் தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டி. ஆமாம், இதைவிட சரியான சந்தர்ப்பம் அப்புக்குட்டிக்க இருக்க முடியாது.

No comments:
Post a Comment