Friday, 9 March 2012

சமந்தாவுக்கு தெலுங்கில் 'சி', தமிழில் 'எல்' மட்டுமே!

டோலிவுட்டில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருக்கும் நடிகை சமந்தாவுக்கு தமிழில் லட்சங்களில் தான் கிள்ளித் தருகிறார்களாம்.
Samantha

இயக்குனர் கௌதம் மேனின் விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்குப் பதிப்பில், நடித்து பெருஸ்ஸ்ஸா டெவலப் ஆனவர் சமந்தா. அவர் தமிழில் நடித்த பானா காத்தாடி மற்றும் மாஸ்கோவின் காவேரி ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் கோலிவுட்டில் சமந்தாவுக்கு மவுசும் இல்லாமல் போனது. இதையடுத்து அவர் ஆந்திரக் கரைக்கு சென்றார்.

அவர் சென்ற நேரமோ என்னமோ அங்கு அவர் நடித்த படங்கள் சக்கைப்போடு போட்டதால் அம்மணிக்கு ஒரே கிராக்கியாகிவிட்டது. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை கோடி ரூபாயாக உயர்த்தினார். அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க டோலிவுட் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். சமந்தான்னா அவ்ளோ கிரேஸாம் அந்த ஊர்ல... தெலுங்கில் சமந்தா பெரிய நடிகையான பிறகு தமிழில் உள்ள ஹீரோக்களும் அவருடன் நடிக்க விரும்புகின்றனர்.

ஆனாலும் அவர் கோலிவுட்டில் நடித்த படங்கள் பெரிதாகப் போகாததால் இங்கு அவருக்கு குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. தற்போது மணிரத்னத்தின் கடல் மற்றும் கௌதம் மேனின் நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படங்களுக்காக அவருக்கு ரூ. 75 முதல் 80 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்தப் படங்கள் ஹிட்டடித்த பிறகு தமிழிலும் சம்பளத்தை ஏற்றி விடலாம் என்ற நினைப்பில் இருக்கிறாராம் சமந்தா.

சமத்து...!

No comments:

Twitter Bird Gadget