Sunday, 11 March 2012

த்ரிஷா அம்மா ஏன் தான் இப்படி செய்றாங்களோ..: லக்ஷ்மி ராய்

லக்ஷ்மி ராய் த்ரிஷாவின் அம்மா உமா மீது படுகோபமாக உள்ளார். உமா லக்ஷ்மி ராயைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதாக அவர் நம்புவதுதான் கோபத்திற்கு காரணம்.
Lakshmi Rai and Uma 
மங்காத்தாவில் நடித்தபோதே லக்ஷ்மி ராய்க்கும், த்ரிஷாவுக்கும் முட்டிக் கொண்டது. அன்று முதலே இருவரும் உர்ரென்று இருக்கிறார்கள். திரிஷா ரோலுக்கு முதலில் என்னைத்தான் கேட்டார்கள் என்று லக்ஷ்மி ராய் கூற, திரிஷா தரப்புக்கு பற்றிக் கொண்டது.

இந்நிலையில் ஜீவா, கார்த்தி கூட எல்லாம் நடிக்க முடியாது என்று லக்ஷ்மி ராய் கூறியதாக பேச்சுக்கள் கிளம்பின. இதனால் லக்ஷ்மி ராய் காட்டமாகி விட்டார்.

இது குறித்து அவரிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

மங்காத்தாவின்போது எனக்கும், த்ரிஷாவுக்கும் இடையே பிரச்சனை இருந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு நான் அவருடன் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அவரின் அம்மா உமா தான் வீணாக பிரச்சனையை பெரிதாக்குகிறார். தேவையில்லாமல் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வருகிறார்.

நான் ஜீவா, கார்த்தி கூட நடிக்க மாட்டேன் என்று கூறவில்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் தான் அவர்களின் படங்களில் நடிக்க மறுத்தேன் என்றார்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி, நடிக்கும் 'இசை' என்ற படத்தில் தனக்கு ஜோடியாக லக்ஷ்மி ராயைத் தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

No comments:

Twitter Bird Gadget