உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான
துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள்,
அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல்
குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி அதாவது 828
மீட்டர் உயரம் கொண்டது.
இது முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால்
வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள்
மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக சீனாவின் ஷாங்காய்
நகரில் உள்ள கிரீன்லேண்ட் குரூப் கட்டிடம் 2-வது இடம் வகிக்கிறது. 632 மீட்டர்
உயரம் கட்டப்பட்டு வரும் அக் கட்டிடம் வருகிற 2014-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்.
No comments:
Post a Comment