Friday, 9 March 2012

சறுக்கலில் சகுனி - ஒரு சங்கட செய்தி

சகுனி படம் முடிந்து ‌ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் அது பற்றி எந்தப் பேச்சையும் காணோம். மாறாக அதற்குப் பிறகு தொடங்கிய சுரா‌ஜின் அலெக்ஸ் பாண்டியன் படத்தைதான் கார்த்தி அண்ட் கோ அதிகமாக பேசி வருகிறது. பத்தி‌ரிகைகளைப் படித்தாலே இந்த விஷயத்தை கிரகித்துக் கொள்ள முடியும். ச‌ரி, சகுனிக்கு ஏனிந்த பாராமுகம்?

படம் காமெடியாகவும் இல்லாமல், அரசியலும் இல்லாமல் அவியல் பக்குவத்தில் யாருமே அண்ட முடியாத தினுசில் இருக்கிறதாம். இப்படியே படத்தை வெளியிட்டால் இருக்கிற இமேஜும் பஞ்சாப் பறந்திடும். அதனால் ஆற அமர உட்கார்ந்து மொக்கை காட்சிகளை எடிட் செய்து புதிதாக ‌ரீ-ஷூட் செய்து... ஏகப்பட்ட பட்டி டிங்க‌ரி‌ங் வேலைகள் இருக்கின்றனவாம்.

மேலும் படத்தின் வில்லனையே மாற்றலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சூழலைப் பார்த்தால் அலெக்ஸ் பாண்டியனுக்கு அப்புறம்தான் சகுனி சந்தைக்கு வரும் போலிருக்கிறது.

No comments:

Twitter Bird Gadget