
இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஒரு ரகசிய வர்த்தக திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் படி ஐரோப்பிய நாடுகளில் 40 ஆயிரம் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். அதற்கு முன்னோடிகளாக அங்கு இந்திய கம்பெனி களுக்கு தற்காலிகமாக பணி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் இங்கு இந்தியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இதற்கு 'மோடு4' என பெயரிடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேரில் இங்கிலாந்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்கள் இங்கு 6 மாதம் தங்கியிருந்து பணிபுரியலாம். தேவைப் பட்டால் மேலும் விசா நீட்டிப்பு வழங்கப்படும். இந்த ரகசிய தகவல் சமீபத்தில் வெளியானது.
No comments:
Post a Comment