
ரஜினியின் பில்லா படம் அஜீத் நடிக்க ரீமேக் செய்து வெளியிடப்பட்டது.
“வெத்தலைய போட்டேண்டி”, “மைநேம் இஸ் பில்லா” போன்ற பாடல்களும் அதில்
ரீமிக்ஸ் செய்யப்பட்டன. அப்படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம்
“பில்லா 2” என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன்
நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதன் இறுதிக் கட்டபடப்பிடிப்பு
ரஷ்யாவில் நடந்து வருகிறது. சண்டைக்காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன.
“பில்லா 2” படத்தை அஜீத் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய
திட்டமிட்டுள்ளனர்.
இது
குறித்து படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ரஷ்யாவில் சில சண்டை
காட்சிகள் எடுக்கப்படுகிறது. பிறகு அஜீத், பார்வதி ஓமன குட்டனின் பாடல்
காட்சியொன்று படமாக்கப்படுகிறது. இப்பாடல் காட்சி சென்னை ஸ்டூடியோக்களில்
படமாக்கப்படும். அஜீத் பிறந்தநாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு
செய்யப்பட்டு உள்ளது என்றார்.
No comments:
Post a Comment