Saturday, 10 March 2012

'கோச்சடையான்' படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது


ரஜினி நடிக்கும் 'கோச்சாடையான்' பட வேலைகள் துவங்கி உள்ளன. சமீபத்தில் போட்டோ சூட்டிங் நடத்தப் பட்டது. ரஜினிக்கு கோச்சடையான் மேக்கப் போட்டு பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 
வருகிற 15-ந்தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது.
'கோச்சடையான்' படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது

வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி படப்பிடிப்பை துவக்குகின்றனர். அன்றைய தினம் ரஜினியும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேயும் நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

பின்னர் படக்குழுவினர் லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு மூன்று வாரம் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்துகிறார்கள் ஹாலிவுட் ஸ்டண்ட் நிபுணர்களை வைத்து ரஜினியின் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர். கிராபிக்ஸ் மூலம் நாகேசின் நகைச்சுவை காட்சிகளும் படமாகிறது. ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

No comments:

Twitter Bird Gadget