Monday, 12 March 2012

என்னைப் பத்தி எழுதும்போது... - இது அசின் வேண்டுகோள்


ஏதோ ஒரு வகையில் தன்னைப் பற்றிய செய்தி சினிமாவுலகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு கலை. சினிமாவில் தானும் இருப்பதை உலகுக்கு உறுதிப்படுத்தும் ஒரு டெக்னிக் அது.

அசினுக்கு அந்தக் கலை நன்றாகவே கைவந்துள்ளது. எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தன்னைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். 'செல்ஃப் பிஆர்!'

சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்த அசின், அங்கு நிருபர்களைச் சந்தித்து, தான் ரொம்ப ரொம்ப பிஸியாக இருப்பதாகக் கூறினார். 

பெரும்பாலும் சினிமா பின்னணி உள்ளவர்கள்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆனால் நான் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். போராடி ஜெயித்தேன் என்றார்.

தன் குடும்பத்தில் தான் ஒருத்தி மட்டுமே திரைத்துறையில் இருப்பதாகவும், வேறு யாரும் வரவில்லை என்றும் கூறினார். எதற்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்றபோது, "எனது இந்தப் பின்னணி தெரியாமல் என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இனி எழுதும்போது இதனை ஞாபகம் கொள்ளுங்கள்," என்றார்.

No comments:

Twitter Bird Gadget